குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!
Sep 13, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்துதான் ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. இங்கு இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் மூலம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்குப் பயன்படும் செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவின் இஸ்ரோ மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு குறைந்த செலவே ஆகிறது. இதனால், பல்வேறு நாடுகளும் இஸ்ரோ வாயிலாகவே செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக, நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊர், புவி வட்டப் பாதைக்கு மிக அருகில் அமைந்திருப்பதும், ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்குச் சாதகமான தட்பவெப்ப சூழல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

இந்த இடங்களைச் சுற்றி தற்போது இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. இந்த சூழலில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்குத் தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும்.

இந்த கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. மாநில அரசும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி விட்டது. இங்கு சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி டிசம்பர் மாதம் வருகை தருகிறார். ஆகவே, பிரதமர் வருவதற்கு முன்பு தற்காலிக ஏவுதளம் அமைத்து சிறிய ரக குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவுவதை பார்வையிடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து விளக்கிக் கூறியிருக்கிறார்.

அதேபோல, ராமேஸ்வரத்தில் பாம்பன் இடையே புதிய இரயில்வே தூக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்து வருகிறது. மேலும், தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

Tags: PM ModiISROkulasekaranpattinamrocket launch site
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

Next Post

மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies