ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து போது, அப்படியே கீழே சரிந்து விழுந்துள்ளார்.
அவரது படுக்கை அறையில் இருந்து பயங்கர சத்தம் வருவதை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேர், கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சியை அவர்களாலேயே நம்பமுடியவில்லை. காரணம், புடின் படுக்கைக்கு அடுத்துள்ள தரையில் அப்படியே சரிந்து கிடந்துள்ளார். அப்போது, அவரது கண்கள் மேல்நோக்கி சொருகியிருந்தாம். மேலும், ட
டைனிங் டேபிள் மேல் இருந்த உணவு மற்றும் பானங்கள் அப்படி கவிழ்ந்து கீழே சிதறிக்கிடந்துள்ளது.
இதனால், பதறிப்போன பாதுகாப்பு அதிகாரிகள் உடனே மருத்துவர்களுக்குத் தகவல் கொடுத்து அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் புடினை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் மிகவும் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் இல்லத்திலேயே அமைந்துள்ள சிறப்பு தீவிர சிகிச்சை மையத்திற்குக் கொண்டு சென்று அங்குச் சிறப்புச் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால், மரண எல்லை வரை சென்ற புடின் மீண்டு வந்துள்ளார் என்கின்றனர் ரஷ்ய ஊடகத்தினர்.