பெங்களூருவில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பி. எம். டப்ளியூ கார் கண்ணாடியை உடைத்து, ரூபாய் 13 இலட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள், பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி.எம்.டப்ளியூ காரின் கண்ணாடியை உடைத்து ரூபாய் 13 இலட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து காரின் உரிமையாளர் பாபு என்பவர் சர்ஜாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
அந்த காணொலியில் தலைக் கவசமும், முகக் கவசமும் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த, ஒருவர் காரின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தார். இன்னொரு நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திடீரென கார் கண்ணாடியை உடைத்து, காரின் உள்ளே நுழைந்து பணம் வைக்கப்பட்டிருந்த கவரை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றது காணொலியில் பதிவாகி உள்ளது.
இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.