இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அக்டோபர் 26-ல் ஐ.நா. பொதுசபைக் கூட்டம்!
Apr 29, 2026, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அக்டோபர் 26-ல் ஐ.நா. பொதுசபைக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 18-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அக்டோபர் 26-ம் தேதி ஐ.நா. பொதுசபையின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு என்பது உலகிலுள்ள 193 நாடுகளை உள்ளடக்கியது. இந்த கூட்டமைப்பில் 6 முக்கிய உறுப்பு அமைப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்பு அமைப்புகளில் மிகவும் முக்கியமானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை. ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும்போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்த பொதுசபை 1945-ல் உருவாக்கப்பட்டது.

இந்த பொதுசபையின் தலைமையகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்திலேயே இருக்கிறது. இங்கு இப்பொதுசபை உறுப்பினர் நாடுகளின் வருடாந்திர சந்திப்பு ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இது தவிர, உலக நாடுகளுக்கிடையே ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களால் நெருக்கடி நிலை ஏற்படும்போது, அவசியம் ஏற்பட்டால் அவசர சந்திப்புகளுக்கு உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் போர் நடந்து வருகிறது. இதையடுத்து, ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10-வது அவசர சந்திப்பு அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் என்று, அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டென்னிஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபையைக் கூட்டும்படி கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று 10-வது அவசர கூட்டம் வரும் 26-ம் தேதி நடத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். 24 மணி நேரத்திலேயே அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: WARUNGAIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

கார் கண்ணாடியை உடைத்து 13 இலட்சம் கொள்ளை!

Next Post

ஹமாஸின் 400 நிலைகள் அழிப்பு, முக்கியத் தலைவர் “அவுட்”: இஸ்ரேல் அறிவிப்பு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies