விஜயதசமியை முன்னிட்டு காந்திநகரில் உள்ள பஹுச்சார் மாதா கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம் செய்தார். நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ‘விஜயதசமி’ நல்வாழ்த்துக்கள்.
அநியாயத்தின் இருள் எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், சத்தியத்தின் அடிப்படையிலான நீதியின் ஒளியின் வெற்றி நித்தியமானது என தெரிவித்துள்ளார்.
‘விஜயதசமி’ என்பது நம்மை எப்பொழுதும் ஞானம் மற்றும் உண்மையின் பாதையில் செல்ல தூண்டும் மற்றும் கற்பிக்கும் ஒரு பண்டிகை எனவும், பகவான் ஸ்ரீ ராம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
விஜயதசமியை முன்னிட்டு காந்திநகரில் உள்ள பகுச்சார் மாதா கோவிலுக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா தரிசனம் செய்தார்., இதனைத்தொடர்ந்து மான்சா கிராமத்தில் தனது தாயாரின் நினைவாக நடத்தப்படும் அன்னதானத்திலும் அவர் பங்கேற்று உணவு அருந்தினார்.
முன்னதாக காந்தி நகரில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து அங்கு பொதுமக்களை சந்தித்த மத்திய அமித் ஷா விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.