தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவித்த திமுக இரண்டரை வருடங்களுக்குப் பிறகு செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்காக 2 கோடியே 20 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதில் 1 கோடி மனுக்கள் தகுதியுடையதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 59 லட்சம் மனுக்கள் தகுதி இல்லை எனத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்படி தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களோடு பல லட்சம் பெண்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கால் கடுக்க காத்துள்ளனர். அவர்களுடன் மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பதுதான் கொடுமை.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரம் பொருத்திய கூட்டி வாகனம் வைத்துள்ளதைக்கூடக் காரணம் காட்டி, வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளதாகச் சொல்லி மகளிர் உரிமத் தொகை மறுக்கப்பட்டுள்ளது தான் வேதனையிலும் வேதனை.
இப்படி, மறுக்கப்பட்டது ஒன்று அல்ல, இரண்டு அல்ல, சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வறுத்தத்துடனும் கோபத்துடனும் உள்ளனர்.
அதிகாரிகளிடம் வாதாடி, போராடிப் பார்த்த மாற்றுத்திறனாளிகள், கடைசியாக அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து தங்களுக்கு அரசால் நேர்ந்த கொடுமை குறித்து தீயாகக் கொந்தளித்துள்ளனர்.
கர்நாடகா, மே.வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்று அமல்படுத்தப்படும் திட்டங்களில் இப்படிப்பட்ட பொல்லாத விதிகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.
இனியாவது திமுக திருந்துமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.