சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து, எந்தா சாரே என வசனம் பேசி புகழ் பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன். இந்த ஒரே ஒரு படம் மூலம், அவரது புகழ் பாலிவுட், ஹாலிவுட் என பரவியது. மேலும், பாடகர், நடனக் கலைஞர் எனக் கவனம் ஈர்த்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன் வீட்டிலிருந்து மிக அதிக சத்தம் வருவதாக, அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத விநாயகன் தலைகணத்தில், மீண்டும் அதே தவற்றைச் செய்துள்ளார். பொறுமை இழந்த அக்கம் பக்கத்து வீட்டார், இது தொடர்பாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தச் சென்றுள்ளனர். குடிபோதையில் நிஜவில்லனாக மாறி காவல்துறையினரையே ஆசாபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார்.
ஒரு கட்டத்திற்குமேல் பொறுமை இழந்த போலீசார், விநாயகனை அலேக்காக காவல்நிலையத்திற்கு அள்ளி வந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வந்தவர்கள் சினிமா போலீஸ் அல்ல, நிஜ போலீஸ் என உணர்ந்த பிறகு எந்தா சாரே என்னை மன்னித்துவிடும் கதறியுள்ளார். இதனால், போலீார் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். ஆளைவிட்டால் போதும் என மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார் விநாயகன்.