பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது.
இதில், ஈட்டி எறிதல, F64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மூன்று சுற்றுகளில் அவர் கடைசியாக எறிந்த 73.29 மீ தூரம் பாரா விளையாட்டில் புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது. இதன் மூலமாக அவர் தங்கம் வென்றார்.
இதே போன்று ஈட்டி எறிதலில் இந்தியாவின் புஷ்பேந்திரா சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஈட்டி எறிதல் F37/38 பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் ஹானி 55.97 மீ தூரம் எறிந்து உலகக் சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான வட்டு எறிதல் F54/F55 பிரிவில் இந்தியாவின் சாக்ஷி கசானா 22.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் கிளாஸ் – 4ல் இந்தியாவின் பவீனா படேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 200 மீ T37 பிரிவில் இந்தியாவின் ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய தூரத்தை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார். மற்றொரு போட்டியில் 200 மீ T35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்கூர் பந்தய தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார்.
பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவின் மணீஷா ராமதாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
மேலும் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.