ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், காரணங்கள் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்பதோடு, பதவி விலகவும் வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைகாரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. மேலும், பீரங்கி, டாங்கிகள் மூலமும், காலாட்படை மூலமும் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட சுமார் 6,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 17,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்று 19-வது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில், “ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்துக் கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்” என்றார். அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சர் கோஹன் கூறியிருக்கிறார்.

Tags: IsraelUnited NationGeneral secretary
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்களை கையாடல் செய்வதிலேயே திமுக குறியாக இருக்கிறது! – அண்ணாமலை.

Next Post

பாரா ஆசியா விளையாட்டு இந்தியாவின் பதக்கங்கள்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies