இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் உள்ளூர் டி20 தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார்.
பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் சஞ்சு சாம்சன் பங்கேற்றுள்ளார். தன் சொந்த மாநிலமான கேரளா அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், கேரளா அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி ஒடிசா அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார்.
இதில் சஞ்சு சாம்சன் 4 பௌண்டரீஸ், 4 சிக்ஸ் என மொத்தமாக 31 பந்துகளில் 55 ரன்களை குவித்துள்ளார். மற்ற வீரர்கள் இந்த அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடாத நிலையில், சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டத்தால் கேரளா 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஒடிசா அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் – அவுட் ஆகி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டம் குறித்து அவருக்கு சமூக ஊடகங்களில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி பாராட்டை குவித்து வருகிறது. இதற்கு முன்னதாக இதே தொடரில் ஒரு போட்டியில் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து இருந்தார்.