புதுவிதமாக உருட்டிய இங்கிலாந்து வீரர் !
Jul 23, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுவிதமாக உருட்டிய இங்கிலாந்து வீரர் !

Web Desk by Web Desk
Oct 25, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

” எங்கள் தோல்விக்கு காற்று தான் காரணம் ” என்று சின்னப்பிள்ளை தனமாக காரணம் கூறும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

பலம் குன்றிய ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டு தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, அதன் பிறகு மும்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தாங்கள் மோசமாக விளையாடுவதற்கு காரணம் இந்தியாவின் சுற்றுச்சூழல் தான் என்பது போல் ஜோ ரூட் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “என் வாழ்நாளில் இதுபோல் உள்ள ஒரு சூழலில் இதற்கு முன்பு நான் விளையாடியதே கிடையாது ஆகையால் களத்தில் நின்று விளையாடும் போது மூச்சு திணறுகிறது. சில சமயம் நமது மூச்சை நாமே சுவாசிப்பது போல் இருக்கிறது.

இது போல் சூழல் நான் இதுவரை கண்டதே இல்லை. நாங்கள் மட்டும் அல்ல தென்னாப்பிரிக்க வீரர் கிளாசென் கூட பேட்டிங் செய்து விட்டு அந்த ஆட்டத்தில் பில்டிங்கிற்கு வரவே இல்லை. காரணம் இது போன்ற ஒரு சூழலில் விளையாடிவிட்டு அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.

நாங்கள் களத்திற்கு வந்தாலே எங்களுடைய ஜெர்சி எல்லாம் வியர்வையில் முற்றிலும் நினைந்து விடுகிறது. வழக்கத்தை விட அதிக அளவில் மூச்சு வாங்குவதாக நான் நினைக்கிறேன். நமது உடல் தகுதி நல்ல நிலையில் இருக்கிறது என்று நமக்கு தெரியும். அதற்காக கடும் முயற்சிகளை எல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இங்கு விளையாடியப் போது எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரசீத் பில்டிங் செய்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று மிகவும் கஷ்டப்பட்டார். எங்களால் சரியாக விளையாட முடியாத காரணத்திற்கு காற்றின் தரம் ஒரு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை.

காற்றின் தரம் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. ஆனால் நாங்கள் மும்பையில் விளையாடும் போது மிகவும் கடினமான சூழலை கண்டோம். மேலும் மைதானத்தில் ஒரு புறத்திலிருந்து பார்க்கும் போது எதிர்புறம் வெயில் சுளிர் என்று அடித்தது. பந்தை பார்க்க கூட முடியவில்லை. காற்றின் தரத்தில் பிரச்சனையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற அனுபவத்தை கண்டதே இல்லை ” என்று ஜோ ரூட் கூறியிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் இந்தியாவின் காற்றில் தரம் குறித்து அவர்கள் குற்றச்சாட்டு இருப்பது இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Tags: england cricket
ShareTweetSendShare
Previous Post

இந்த முறை மிஸ்ஸே ஆகாது – சூரியகுமார் யாதவ் !

Next Post

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட முதியவர்!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies