சூரியகுமார் யதாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த ரோஹித் சர்மா.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி தனது அடுத்த போட்டியை இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் காயத்தில் உள்ள இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு இன்னும் காயம் குணமாகாத காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டி முன்பாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் கடந்த போட்டியில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவர் என்று இரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சேஸிங்கின் போது பேட்டிங் ஆட வந்தார். ஆனால், 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஓடி வருவதை பார்க்காமல் பந்தை பார்த்துக் கொண்டு இருந்ததால், அவர் ரன் அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே, வாய்ப்பே இல்லாமல் இந்திய அணியில் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்த சூர்யகுமார் யாதவ் தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார் என்ற தகவல்கள் முதலில் வெளியானது. அதனால், இனி சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்டது.
ஆனால், தற்போது வந்துள்ள செய்தியின் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா காயம் குணமடைந்தாலும் அவரால் முழு வீச்சில் பந்து வீச முடியுமா என சந்தேகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் சிறிது காலம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அவருக்கு மீண்டும் ஏற்கனவே காயம் இருந்த இடத்தில் வலி ஏற்படாமல் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு பாண்டியவிற்கு மீண்டும் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.
அதனால், பாண்டியாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவ்வை அணியில் ஆட வைக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.