காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் ஹமாஸ் தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றனர் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியிருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “இந்திராவின் படுகொலையை சித்தரித்து கனடாவில் கொண்டாடப்பட்டது. இந்த செயலை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ காலிஸ்தானிகளை ஆதரிக்கிறது. காங்கிரஸும், வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தியும் ஹமாஸ் தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.