ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தின், நவ்ஷேரா துணைப் பிரிவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள டீயிங் கிராமத்தில் இன்று பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெறாத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது அம்மாநில மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தப் போட்டியை ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூட பிரமாண்டமாக திருவிழாவை போல் பார்த்து இரசித்தனர்.
மல்யுத்தம் என்பது பாரம்பரியமாக ஆண்கள் விளையாடி வரும் ஒரு விளையாட்டு. இதில் பெண்களும் விளையாடுவது சமத்துவத்தை ஏற்படுத்துகிறது என்றும் பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.