பாகிஸ்தான் பொது தேர்தலில் நவாஸ் ஷெரீப் போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட தயாராக உள்ளதாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், நான் சிறைக்கு அனுப்பப்பட்டு, பிடிஐ கட்சி ஒழிக்கப்பட்டவுடன் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்குத் திரும்பக் காத்திருப்பதாகவும், அவருக்கு எதிரான அனைத்து ஊழல் வழக்குகளும் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும் இம்ரான் கூறியுள்ளார்.
நவாஸ் எந்த தொகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்யட்டும், அந்த தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுகிறேன். நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மக்களின் மனநிலை மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் மக்களை மாற்றியுள்ளன. ‘இராணுவ ஸ்தாபனத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்கள் போய்விட்டதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.