நியூஸ் கிளிக் தொடர்பான வழக்கில் பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரை நவம்பர் 2 வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை பரப்புவதற்காக நியூஸ் போர்ட்டல் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை நவம்பர் 2ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களின் நீதிமன்ற காவல் முடியும் நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரின் காவலையும் நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.