ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
நாட்டில் மக்களவை மாநில பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்துஉள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சாத்தியக்கூரை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டும் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது
இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டாவது உயர்நிலை குழு கூட்டம் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாதக பாதகங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்ட திருத்தங்கள் தொட்ர்பாக விவாதிக்கப்ட்டதாக தெரிகிறது.