அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் மர்ம நபர் ஒருவர் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் 22 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக மைனே காவல்துறை எக்ஸ் தளத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வீட்டை பூட்டிக்கொண்டு இருங்கள். வெளியே வர வேண்டாம். மர்ம நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவனின் இரு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஸ்பேர்டைம் ரெக்கரேஷன், ஸ்கெமிங்கீஸ் பார் & கிரில் உணவகம் மற்றும் வால்மார்ட் விநியோக மையம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரே இடத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதும் பலர் பலியாவதும் அடிக்கடி நடைபெறும். ஆனால் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில் மர்ம நபரை கண்டுபிடிக்க காவல்துறை திணறி வருவது குறிப்பிடத்தக்கது.