சனிக்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால், ஒரு சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காரணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழும் நாளில் துலாம் ராசியில் 4 கிரகங்கள் கூடியுள்ளன. இதனால், யாருக்கெல்லாம் பாதிப்பு – என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இது தொடர்பாகத் திருக்கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, சந்திர கிரகணம் 29-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி 05 நிமிடத்துக்குத் தொடங்குகிறது. அதிகாலை 2 மணி 236 நிமிடத்துக்கு நிறவு பெறுகிறது.
ராகு பிடியில் சிக்கிய இந்த சந்திர கிரகணத்தின் போது, அஸ்வணி, மகம், மூலம், ரேவதி, பரணி நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்வது நல்லது. மேலும், மேஷம், தனுசு, சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த நேரத்தில் வெளியே வரக்கூடாது. மேலும், கர்ப்பம் தரிக்கக்கூடாது.
கிரகண நாளில் காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று, விநாயகர், சரஸ்வதி, மகாதிர்ஷ்ணமர்த்தினியை வணங்குவது, அன்னாபிஷேகம் செய்வது, துர்கா அஷ்டோத்திர பாராயணம் செய்வது மிகவும் நல்லது.