அயோத்தியில் எம்பெருமான் ராமர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள செய்தி மகிழ்ச்சி அடையவைத்துள்ளதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
22.1.2024ல் அயோத்தியில் எம்பெருமான் ராமர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்கிற செய்தி நம்மை மகிழ்சி கடலில் ஆழ்த்துகின்ற செய்தியாகும். பல நூற்றாண்டுகள் நடத்தப்பட்ட இந்து சமுதாயத்தின் போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. மாண்புமிகு பாரத பிரதமர் அதில் கலந்து கொள்வது கூடுதல்…
— H Raja (@HRajaBJP) October 26, 2023
இது தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது எக்ஸ் பதிவில், 22.1.2024 -ம் தேதி அயோத்தியில் எம்பெருமான் ராமர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்கிற செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்ற செய்தியாகும். பல நூற்றாண்டுகள் நடத்தப்பட்ட இந்து சமுதாயத்தின் போராட்டங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி. பாரத பிரதமர் அதில் கலந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 22-ம் தேதி மிக பிரமாண்ட வகையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.