108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவம் நேற்று தொடங்கியது. திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
வரும் டிசம்பர் 12 -ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்க உள்ளது.
12 -ம் தேதி பகல்பத்து விழாவும், இதனைத் தொடர்ந்து பகல் பத்து விழாவின் பத்தாம் திருநாளில் மோகினி அலங்காரமும், 12ம் தேதி பகல்பத்து விழா, தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம்,
22 – ம் தேதி ராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழாவும், 23 -ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 -ம் ஆண்டு ஜனவரி 2 – ம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவு பெறுகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி அருகே ஸ்ரீரங்கம் உள்ளதால், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை நாமக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைத் திருக்கோவில் நிர்வாகம் உரிய முறையில் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.