ஹமூன் புயல் இடிபாடுகளில் சிக்கி அப்பாவி பொது மக்கள் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமூன் எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது நேற்று தீவிர புயலாக மாறியது. இதனைத் தொடர்ந்து அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த நிலையில், தீவிர புயலாக இருந்த ஹமூன், வலுவிழந்து நள்ளிரவு 2.30 மணியளவில் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் கரையைக் கடந்தது.
அப்போது, தென்கிழக்கு வங்கதேசத்தின் கடற்கரை பகுதியில் 75 – 85 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. புயல் மற்றும் கடும் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதமாபக உயிரிழந்தனர். ஹமூன் புயல் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும் சாலைகள் முடக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.