சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
சீனாவில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜின்ஜியாங் பகுதியில் புதன்கிழமை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த பகுதியில் உள்ள மக்கள் இதை உணர்ந்தனர். இதனால், அவர்கள் பயத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பயத்தில் அலறினர். இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பொருள் சேதம் குறித்து உரியத் தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆகப் பதிவாகியிருந்தது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் பூமிக்கு கீழே 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.