பராகுவே அருகே ஹெலிகாப்டரில் இருந்து கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த காஷ்மா என்பவர் தொலைக்காட்சியில் ஒன் மேன் ஒன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வெற்றி பெறாததால் பரிசு தொகையை என்ன செய்வது என யோசித்துள்ளார். மேலும் இஸ்டாகிராம் மூலம் பரிசுத்தொகையை என்ன செய்வது என தனது சப்ஸ்கிரைபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த பணத்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரத்து கொடுக்க நினைத்த அவர், ஹெலிகாப்டரில் இருந்து வீசுவது என முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலையும் போட்டியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கரன்சி நோட்டுக்களை ஹெலிகாப்டரில் இருந்து வீசியுள்ளார். திடீரென ஆகாயத்தில் இருந்து கரன்சி நோட்டுக்கள் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்க்ள் பைகளில் நிரப்பி எடுத்துசென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் காஷ்மாவின் கணக்குளை ஆராய தொடங்கியுள்ளனர்.