ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன்பு திமுகவினர் தான் ஜாமீனில் எடுத்தனர் தமிழக பாஜ குற்றம் சாட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பாஜக எக்ஸ் பதிவில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர்.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர்… https://t.co/4MzcF6nTir pic.twitter.com/ddasD972Av
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 26, 2023
அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரைப் பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது.
தமிழக பாஜக அலுவலகத்தைத் தாக்கிய ஒருவரை திமுகவினர் பிணையில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.