தமிழக ஆளுநர் மீது தாக்குதல் - டி.ஆர்.பாலுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Jan 14, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் – டி.ஆர்.பாலுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் மாளிகை மீது பிரபல ரவுடி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கும், தமிழக ஆளுநர் மீது திமுக எம்பி டிஆர் பாலு அநாகரிகமாகப் பேசியதற்கும் இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் அவர்கள் ஆரியம், திராவிடம் என்பது எங்கும் இல்லை. நாடு விடுதலையான நாளை துக்க நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பள்ளி படிப்பை கூட முடிக்காத தற்குறி கால்டுவெல் தான் திராவிட சித்தாந்திகள் தூக்கி பிடிக்கும் அறிவாளி என்ற கருத்துக்களை மருது பாண்டியர் நிகழ்வில் பேசினார்.

இதற்கு திமுக எம்.பி‌. டி.ஆர். பாலு தமிழக கவர்னரை அநாகரிகமாக விமர்சனம் செய்து இருந்தார். பிரபல ரவுடியான கருக்கா வினோத் கவர்னர் மாளிகை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளான். நல்ல வேளையாக அவை தீப்பற்றி வெடிக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்து இருந்தால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அந்த ரவுடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் இருப்பதாகவும், முதல்நாள் தான் அவன் பிணையில் வெளிவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய ரவுடிக்கு தமிழகத்தில் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது என்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவை அடைந்துள்ளது என்பது புரியும். மேலும் முதல் நாள் வந்தவன் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் தைரியம் எங்கு இருந்து வருகிறது. பத்து நாட்களில் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற தைரியம் தானே?

மேலும், அந்த ரவுடி பெரிய சமூக அக்கறை உள்ளவன் போல சித்தரிக்கப்பட்டு அதாவது கவர்னர் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு செய்தியும், தமிழக கவர்னர் நீட் தேர்வு ரத்து செய்யக் கொடுத்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் செய்தி வெளியாகிறது. காவல்துறை ஆளும்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது. இத்தகைய போக்கு காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது நடந்து வருகிறது. இது ஒருவகையான பாசிச மனநோய். எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும் என்ற பயத்தை உருவாக்க இதுபோல் நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை.

அதுமட்டுமல்லாது மேலும் ஒரு அநாகரிகமான செயலை ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அது சமூக வலைதளங்களில், பொது கூட்டங்களில் திமுக அரசை அமைச்சர்கள் செயல்பாட்டை ஜனநாயக ரீதியில் விமர்சனம் செய்தாலே குறைந்தது ஐந்து பிரிவுகளில் வழக்கு போடுவதும் அதில் ஜாமினில் வெளிவர முடியாத இரண்டு பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது காவல்துறை.

அதேசமயம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகவினரின் மனம் குளிர அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதே தலையாய கடமையாக நினைத்து செயல்படுகிறது என்பது வேதனையான உண்மை. தமிழகத்தில் உச்சபட்ச பாதுகாப்பு உள்ள இடத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. காவல் நிலையங்களில் நீதிமன்றங்களில் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.

எனவே, இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags: hindhu munani
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல் வெடிகுண்டு வீசியவரை ஜாமீனில் எடுத்த திமுகவினர் – பாஜக குற்றச்சாட்டு!

Next Post

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை !

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies