சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளுக்கான மகளிர் பேட்மிண்டர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இதில் இன்று மகளிர் பேட்மிண்டர் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் பங்கேற்றார்.
இதன் இறுதிப்போட்டியில் சீன வீராங்னையை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன் 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
குறிப்பாக இரண்டாவது செட்டில் 5-2 என்ற பின் தங்கியிருந்த சூழலில், கடைசி நேரத்தில் அட்டாக் செய்து அபார வெற்றியைப் பதிவு செய்து தங்க பதக்கம் வென்றார்.