டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை கார் ஒன்று மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் டெல்லி கொனாட் பேளஸ் பகுதியில் ரவி என்ற கான்ஸ்டபிள் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எஸ்யுவி கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து காவலரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.