கடந்த பல வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட காலனியச் சட்டங்கள் தூக்கி எறிந்துவிட்டு, நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில், இந்தியத் தண்டனை சட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியத் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, புதிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ந்து வருகிறது. அந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில் இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே, ஐபிஎஸ் தேர்வானவர்களில் பெண்களின் எண்ணிக்கை முந்பைவிட அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெண்களின் முன்னேற்றத்துடன் நாடு வளர்ச்சியடைந்து வருவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது என மகளிர் அமைப்புகள் புகழாராம் சூட்டியுள்ளது.