இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
டெல்லியில் 16வது நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஆகிய இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்று உரையாற்றினார்.
இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் சுமார் 895 கிலோ மீட்டர் நீள இருப்பு பாதையில் மெட்ரோ ரயில்கள் இயங்குவதாகவும், இது அடுத்த சில ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்காக வளரும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.