இந்திய தடகள வீரர் தர்மராஜ் சோலைராஜ் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதில் இந்தியாவிற்கு மற்றொரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் – டி64 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக தடகள வீரர் தர்மராஜ் சோலைராஜ் பங்குபெற்றார்.
இதில் தர்மராஜ் சோலைராஜ் 6.80 மீ தூரம் வரையில் தாண்டி சாதனை படைத்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியருக்கு 25 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.
மேலும் இலங்கை அணி வீரர் மத்தக கமகே 6.68 மீ தூரம் வரையில் தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இதனிடையே ஜப்பான் அணியின் வீரர் மடாயோஷி கோட்டோ 6.35 மீ தூரம் வரையில் தாண்டி மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலம் உட்பட மொத்தமாக 98 பதக்கங்களை பெற்றுள்ளது.