திருவண்ணாமலை வருண லிங்க கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழும் திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோவில் சுற்றுவட்டார பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், வருண லிங்கத்திற்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், பிரபல நடிகரை இருக்கும் தனுஷ் அவர்களின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
2012 யில் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கினார். பின்னர் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.