பந்துவீச்சு பயிற்சியில் விராட் கோலி !
Mar 15, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்துவீச்சு பயிற்சியில் விராட் கோலி !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இந்தியா விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இந்திய அணி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம், காப்பாளன் போல் விராட் கோலி இந்திய அணியை மீட்டு வருகிறார்.

இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி கடைசி வரை நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் விராட் கோலி பீஸ்ட் பார்மில் இருப்பதாக இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதன்பின் அந்த ஓவரை நிறைவு செய்வதற்காக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியை அழைத்தார்.

இதன்பின் 3 பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து அட்டாக்கில் இருந்து வெளியேறினார். திடீரென விராட் கோலி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டது இரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் நேற்றிரவே லக்னோ சென்றடைந்தனர். இதன்பின் இன்று இந்திய அணி வீரர்கள் மாலை நேர பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு, நட்சத்திர வீரர் விராட் கோலி பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உதவி செய்தார். தற்போது விராட் கோலி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் சில ஓவர்களையாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீச வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Tags: virat kohliindia cricket team
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் 10 உறுதியான உறுதி மொழிகள் – வானதி சீனிவாசன் புகழாரம்!

Next Post

பிரதமர் மோடி அக்டோபர் 31-ம் தேதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திகிறார்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies