பாரதப் பிரதமர் மோடியின் 10 உறுதிமொழிகளை நாம் அனைவரும் கடைப்பிடித்தால், நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காக்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமது எக்ஸ் பதிவில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொது மக்களின் நலன் கருதி பாரதப் பிரதமர் மோடியின் 10 உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
பாரத பிரதமர் திரு,.@narendramodi அவர்களின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்!
நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்.1.எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது.
2.டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது.
3.கிராமங்களில் தூய்மையைப் பேணுவதில் விழிப்புணர்வு… pic.twitter.com/6cdvYXnJkD
— Vanathi Srinivasan (@VanathiBJP) October 27, 2023
முதலாவதாக, எதிர்கால சந்ததியினருக்காகத் தண்ணீரைச் சேமிப்பது, அடுத்து, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது, மூன்றாவதாகக் கிராமங்களில் தூய்மையைப் பேணுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நான்காவதாக உள்ளூர் பொருட்களை வாங்க ஊக்குவித்தல், ஐந்தாவதாக, தரமான பொருட்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆறாவதாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் முன்னர், இந்தியாவின் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லுதல்,
ஏழாவதாக இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும், எட்டாவதாக நமது அன்றாட உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், ஒன்பதாவதாக தனிப்பட்ட உடல் நலத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும், பத்தாவதாக ஏழைக் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துதல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமர் மோடியின் 10 உறுதி மொழிகளுக்கு பெண்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.