நாளை நடைபெறும் ரோஜ்கர் மேளாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
நாடு முழுதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ‘ரோஜ்கார் மேளா’ என்கிற பெயரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றின் பல்வேறு துறைகளில் பணி வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சுமார் 7 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். அந்த வகையில், நாளை நடக்கவிருக்கும் ரோஜ்கர் மேளாவில், பாரத பிரதமர் மோடி, காணொளிக் காட்சி வாயிலாக 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.