மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4:53 மணியளவில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேபோல் திங்கட்கிழமையும் மியான்மரில் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.