சீனாவில் கொரோனா தொற்றின் போது, கடுமையான ஊரடங்கு நடவடிக்கைக்கு காரணமான, வூ சூன்யூ நேற்று மரணம் அடைந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சீனாவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் வூ சூன்யூ ஆவார். இவர் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைமை தொற்றுநோய் நிபுணராக இருந்து வந்தார்.
சீனாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நகரங்களைப் பூட்டி கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்கும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைக்குக் காரணமானவர் இவர் தான்.
இந்த நிலையில், வூ சூன்யூ நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.