இன்றைய உலகக்கோப்பைப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றையப் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வுச் செய்துள்ளார்.
நெதர்லாந்து அணியின் வீரர்கள் :
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( தலைவர்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
வங்கதேச அணியின் வீரர்கள் :
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (தலைவர்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் , மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்.