உலகில் ஒருவர் போல் 7 பேர் இருப்பார்கள் எனச் சொல்வது உண்டு. உண்மையில் அது மெய்யா அல்லது பொய்யா என யாருக்கும் தெரியாது. ஆனால், ஒருவர் போல் மற்றொருவர் இருப்பது நிஜம்.
இதுபோலத்தான் இந்த கதையும். இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. காரணம், சம்பந்தப்பட்ட நபர் சாதாரண நபர் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல முகசாயலில் இருப்பவர்.
குறிப்பாக, பிரபலங்களைப் பார்ப்பது என்பது மிகவும் அரிது. அப்படி இருக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று உள்ள ஒருவரின் காணொளி இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
கொச்சி துறைமுகத்தில் உள்ள பட்டாளம் சாலையில் தேநீர்க்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு, நடிகர் ரஜினியைப்போல் உள்ளார் என்பதால் இணையத்தில் டிரெண்டாகி வருகிறார்.
சாலையின் ஓரத்தில் நிற்கும் அவரைப் பார்க்கும் யாரும், சூப்பர் ஸ்டார் ரஜினியே அங்கு நிற்பதாக நினைத்து ஆச்சர்யப்பட்டுவார்கள். இப்படித்தான் பிரபலங்கள் பலரும் சுதாகர் பிரவை பார்த்து ரஜினிகாந்த் என ஏமாந்து போய் உள்ளனர்.
மலையாள நடிகர் கம் இயக்குனர் நாதிர்ஷா, ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காகக் கொச்சி சென்றுள்ளார். அங்கு அவர் சுதாகர் பிரபுவைப் பார்த்துவிட்டு ரஜினி என வியந்துபோய் உள்ளார். அவரது உடல் மொழி, சிகை அலங்காரம் என எல்லாமே ரஜினியைப்போல் போலவே இருந்தன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.