ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ஆன்மீக
விழா மற்றும் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவில், கணபதி ஹோமமும் வருடாபிஷேகமும் நடைபெற்றது. யாகசாலையைத் தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்கச் சிவாச்சாரியார்கள் கும்ப கலசம் தேவர் நினைவாலயம் வலம் சென்று பசும்பொன்
முத்துராமலிங்க தேவர் சிலைக்குப் புனித கும்ப நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் சார்பில் பால்குடம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம்,
பொங்கல் வைத்தல், முடி காணிக்கை செலுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.