ரோஜ்கர் மேளா: 50,000 பேருக்கு தீபாவளி பரிசு... பிரதமர் மோடி!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோஜ்கர் மேளா: 50,000 பேருக்கு தீபாவளி பரிசு… பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று நடந்த ரோஜ்கர் மேளாவில், காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இது தீபாவளி பரிசு என்று கூறியிருக்கிறார்.

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ரோஜ்கர் மேளா என்கிற வேலைவாய்ப்பு முகாமை கடந்த ஆண்டு தொடங்கினார். அந்த வகையில், இதுவரை பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானோருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இம்முகாம்களின் மூலம் பணி பெறுபவர்கள், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 37 இடங்களில் ரோஜ்கர் மேளா நடைபெற்றது. இம்முகாமில் காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரோஜ்கர் மேளா தொடங்கப்பட்டது. இந்த ரோஜ்கர் மேளாவின் கீழ் இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று 50,000 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இவர்களுக்கு வேலை கிடைத்திருப்பதால் இவர்களது குடும்பத்தினருக்கு தீபாவளி பண்டிகைக்கு குறைவிருக்காது. அதேசமயம், இது அவர்களுக்கான தீபாவளி பரிசாகும். காதியின் விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது 1.25 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இதன் மூலம், காதியின் இழந்த பெருமையை எங்கள் அரசு மீட்டெடுத்துள்ளது” என்றார்.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், இரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.

Tags: PM ModiRozgar mela50000 youths
Share
Tweet
SendShare
Previous Post

திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Next Post

கோலாகலமாகத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies