மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஒரு நாளைக்கு மூன்று போட்டிகள் என மொத்தமாக 20 போட்டிகள் நடைபெறும்.
இதில் முதல்நாளான நேற்று இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வென்றிப் பெற்றது.
அதேபோல் நேற்று ஜப்பான் மற்றும் மலேசியா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் அணியின் ரிகா ஒகாவா 13 வது நிமிடத்திலும், மாய் டோரியாமா 43 வது நிமிடத்திலும், ஷிஹோ கோபயாகவா 54 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மலேசியா அணி எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனதால் ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
அதே போல் நேற்று நடைபெற்ற மற்றொருப் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகள் விளையாடின. இதில் தென் கொரியா அணியின் சுஜின் அன்னும் 18 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
சீனா அணியின் வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாததால் தென் கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது