வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதார மையம் கட்டப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, கோவில் வளாகத்தின் நுழைவு வாயில் எண் 4-க்கு அருகில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு அதிகமாக பக்தர்கள் வரும் காலங்களில் இந்த மருத்துவ மையம் உதவியாக இருக்கும். மேலும், கோவில் வளாகத்தில், அவசர சிகிச்சைக்கு வசதியாக ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளது.