இஸ்ரேல் ஹமாஸ் போர் மூன்றாவது வாரமாக நடந்து வரும் நிலையில், குஜராத்திலிருந்து இஸ்ரேலுக்குப் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கி உள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் பீங்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை குஜராத்திலிருந்து இஸ்ரேலுக்கு ரூபாய் 1,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அது வளர்ச்சியடைந்துள்ளது. உலகளவில் இந்தியாவிலிருந்து மொத்த ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதம் இஸ்ரேலுக்குச் செல்கிறது. எனவே இது மிகப் பெரிய சந்தையாகும். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியது முதல் நிறையப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் இங்கேயே தேங்கிக் கிடக்கின்றன. இது புதிய ஆர்டர்களையும் பாதித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் இரஷ்யா-உக்ரைன் போரின் போதிலும், மோர்பியில் (Morbi) உள்ள செராமிக் தொழில்துறை அதன் ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு ரூபாய் 16,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 6 மாதத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கை எட்ட முடியும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் விரைவில் தீரும் எனத் தொழில் துறையினர் நம்புகின்றனர்.