கேரளாவின் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலத்தில் நடைப்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
கேரளாவின் கொச்சி களமசேரியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி சப்தம் அடுத்தடுத்து கேட்டது. இந்த திடீர் வெடி விபத்தால் பயங்கர தீ பற்றி எரிந்தது.
இந்த பயங்கர வெடி சப்தத்தால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 29 பேர் படுகாயங்களுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கொச்சி பிரார்த்தனை கூட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த வெடி விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. வெடிகுண்டுகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணத்தால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த கேரள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.