மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது தான் திராவிடம் மாடலின் சாதனையா? எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருச்செங்கோட்டில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
போர் வெல் ரிக் உற்பத்தியில் இந்தியாவின் மையமாக இருப்பது திருச்செங்கோடு. கிட்டத்தட்ட 20,000 இயந்திரங்களை வைத்துள்ள திருச்செங்கோடு ரிக் உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் தங்கள் ரிக்குகளை எடுத்துச் செல்கிறார்கள்.
சுமார் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் ஆரியர்களுக்கு தான் எதிரி ஆன்மீகத்திற்கு இல்லை என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இவர்கள் சொல்கிறபடி விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்கள் ஆரியர்கள் என்றால், வட இந்தியாவில் இருக்கும் இவரது இந்தி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை எதிர்க்கிறாரா?
இந்த திருச்செங்கோடு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் மகாத்மா காந்தி ஆசிரமம் உள்ளது. காந்தி அவர்கள் இரண்டு முறை இங்கே தங்கி உள்ளார்கள். இந்த ஆசிரமத்தின் முக்கிய பணி மதுவிலக்கு பிரச்சாரம் மற்றும் கைத்தறி வலியுறுத்தும் பிரச்சாரம். ஆனால், காந்தி ஆசிரமம் இருக்கும் இதே திருச்செங்கோட்டில் தான் டாஸ்மாக்கில் குடிபோதையில் ஒருவர் இன்னொருவரை வெட்டிக் கொலை செய்தார். இப்படி மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது தான் திராவிடம் மாடலின் சாதனை.
திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார், காவேரி திருமணிமுத்தாறு இணைப்பு, ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் என எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.
திமுக சின்னத்தில் நின்ற இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், இன்று சட்டமன்றத்தில் திமுக தலைவர்களுக்கு சாமரம் வீசும் ஒரு ஆளாக… pic.twitter.com/3bdvMsld5X
— K.Annamalai (@annamalai_k) October 29, 2023
திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார், காவேரி திருமணிமுத்தாறு இணைப்பு, ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் என எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக சின்னத்தில் நின்ற இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், இன்று சட்டமன்றத்தில் திமுக தலைவர்களுக்கு சாமரம் வீசும் ஒரு ஆளாக மாறிவிட்டார். அவரால் அவரது கட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் எந்த பலனும் இல்லை. அவர் கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்து விடுவது நல்லது.
தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாமக்கலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,19,462 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு, ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.
ஆனால் திமுக சொன்ன 100 ரூபாய் சமையல் எரிவாயு மானிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 1,21,516 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், 85,505 விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயி நிதியின் மூலமாக வருடம் 6000, நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 3422 கோடி ரூபாய் என மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், பிரதமரின் நலத்திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுப்போம். தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத திமுக கூட்டணியைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்தார்.