ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியின் வீரர்கள் :
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் முகமது ஷமி.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் :
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ( தலைவர் ), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட் மற்றும் கஸ் அட்கின்சன்.