நடிகர் ரஜினிகாந்த் எளிமையான தோற்றத்தில் தனது பையை தானே எடுத்துக்கொண்டு செல்கிறார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனது 170 வது படத்தில் நடித்துவருகிறார். இதில் இவருடன் இனைத்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ரஜினி காந்த மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் எளிமையான தோற்றத்தில் தனது பையை தானே எடுத்துக்கொண்டு செல்கிறார்.
இவரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மற்றும் கியாரா மும்பையிலிருந்து டெல்லி செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றனர்.
இருவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆனா நிலையில் தங்களது முதல் கர்வா செளத் அதாவது காரடையான் நோன்பு விழாவிற்காக டெல்லி செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.