ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் பயணிகள் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதில் வேதனை அடைகிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Anguished that the derailment of a passenger train in Vizianagaram district of Andhra Pradesh caused loss of lives. My thoughts and prayers are with the bereaved families. I pray for the speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) October 29, 2023