கேரளாவிலுள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்தார்.
உலக புகழ் பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் இன்று திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஜே.பி நட்டா அவர்களுக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாதம் மற்றும் பத்மநாபசுவாமி படம் வழங்கப்பட்டது.